லக்கிம்பூர் சம்பவம் பற்றி ட்வீட் : பாஜக செயற்குழுவிலிருந்து மேனகா, வருண்காந்தி நீக்கம்

லக்கிம்பூர் சம்பவம் பற்றி ட்வீட் : பாஜக செயற்குழுவிலிருந்து மேனகா, வருண்காந்தி நீக்கம்
லக்கிம்பூர் சம்பவம் பற்றி ட்வீட் : பாஜக செயற்குழுவிலிருந்து மேனகா, வருண்காந்தி நீக்கம்

லக்கிம்பூர் சம்பவம் குறித்து வருண்காந்தி நேற்று ட்வீட் செய்த நிலையில், இன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுவிலிருந்து வருண்காந்தி மற்றும் மேனகா காந்தி ஆகியோர் நீக்கப்பட்டனர்.

பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா இன்று 80 பேர் கொண்ட தேசிய செயற்குழு நிர்வாகிகளை அறிவித்தார், பிரதமர் மோடி முதல் பல மத்திய அமைச்சர்கள், மாநில தலைவர்கள் மற்றும் எல்.கே.அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும், மேனகா காந்தி, வருண் காந்தி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சவுத்ரி பீரேந்தர் சிங் ஆகியோர் புதிய நிர்வாகிகள் பட்டியலில் இடம் பெறவில்லை.

லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது கார் ஏறி செல்லும் வீடியோவை நேற்று பகிர்ந்த வருண்காந்தி, "லக்கிம்பூர் கேரியில் விவசாயிகளை வேண்டுமென்றே நசுக்கும் வாகனங்களின் இந்த வீடியோ யாருடைய உள்ளத்தையும் உலுக்கும். இந்த வீடியோவை காவல்துறை கவனத்தில் கொள்ள வேண்டும், இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அதில் இருந்தவர்களை அடையாளம் கண்டு, சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் அடையாளம் கண்டு உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும்" என்று ட்வீட் செய்திருந்தார்.

பாஜக தேசிய செயற்குழு என்பது கட்சி அமைப்பின் நிகழ்ச்சி நிரலை வடிவமைக்கும் முக்கிய ஆலோசனைக் குழுவாகும். இதில் 80 செயற்குழு உறுப்பினர்கள் தவிர, நிர்வாகத்தில் 50 சிறப்பு அழைப்பாளர்களும் 179 நிரந்தர அழைப்பாளர்களும் இருப்பார்கள். அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், கிரண் ரிஜுஜு, ஜெய்சங்கர், ரவிசங்கர் பிரசாத், மன்சுக் மாண்டவியா, பூபேந்திர யாதவ், அனுராக் சிங் தாக்கூர், ஜிதேந்திர சிங், நிர்மலா சீதாராமன், ஜோதிராதித்ய சிந்தியா, மற்றும் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com