மத்திய நிதி அமைச்சக செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

மத்திய நிதி அமைச்சக செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

மத்திய நிதி அமைச்சக செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி நியமனம்
Published on

தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக பணியமர்த்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய அரசின் செலவினங்களை நிர்வகிக்கும் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1987 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான சோமநாதன் தற்போது தமிழ்நாட்டில் பணியாற்றி வருகிறார். முன்னாள் மத்திய நிதி அமைச்சக செயலாளராக இருந்த கிரிஷ் சந்திர முர்மு அக்டோபரில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் லெப்டினன்ட் கவர்னராக நியமிக்கப்பட்டார்.

இதேபோல், அமித் கரேவுக்கு பதிலாக ரவி மிட்டல் தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 1986 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ரவி மிட்டல், தற்போது நிதிச் சேவைத் துறையின் சிறப்புச் செயலாளராக உள்ளார். சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆர். சுப்ரமணியத்திற்கு பதிலாக, அமித் கரே இப்போது உயர்கல்வித் துறையின் செயலாளராக பணியாற்றுவார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com