\
தன் கணவர் உயிரிழந்த செய்தியை வாசித்த செய்தி தொகுப்பாளர்

தன் கணவர் உயிரிழந்த செய்தியை வாசித்த செய்தி தொகுப்பாளர்

தன் கணவர் உயிரிழந்த செய்தியை வாசித்த செய்தி தொகுப்பாளர்
Published on: 

ஐபிசி - 24 செய்தி தொலைக்காட்சி தொகுப்பாளர் சுப்ரீட் கவுர் செய்தி வாசிக்கும் போது தன் கணவர் சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியை வாசித்துள்ளார்.

சத்தீஸ்கரில் உள்ள மகாசமுந்த் மாவட்டத்தில் பயங்கர கார் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் வாகனத்தில் வந்த 5 பேரில் 3 பேர் உயிரிழந்துவிட்டனர் எனவும், அது யார் யார் என்பது குறித்த விவரங்களை ஐபிசி - 24 செய்தி நிருபர் தனது தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக கூறியுள்ளார். அப்போது நேரலையில் செய்தி தொகுப்பாளர் சுப்ரீட் கவுர் விபத்து குறித்த விவரங்களை கேட்டரிந்துள்ளார். அந்த விபத்தில் தன் கணவர் மரணமடைந்த செய்தி நிருபர் கூறிய நிவரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. அந்த வேளையில் நேரலையில் இருந்த கவுர் செய்வதறியாது அதிர்ச்சி அடைந்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com