ஜிம்மில் பயிற்சி செய்துகொண்டிருந்த போது திடீர் மாரடைப்பு - பரிதாபமாக உயிரிழந்த டிவி நடிகர்

ஜிம்மில் பயிற்சி செய்துகொண்டிருந்த போது திடீர் மாரடைப்பு - பரிதாபமாக உயிரிழந்த டிவி நடிகர்
ஜிம்மில் பயிற்சி செய்துகொண்டிருந்த போது திடீர் மாரடைப்பு - பரிதாபமாக உயிரிழந்த டிவி நடிகர்

ஆனந்த் சூர்யவன்ஷி என்ற தொலைக்காட்சி நடிகர் இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஆனந்த் சூர்யவன்ஷி என்று அழைக்கப்படும் நடிகர் சித்தாந்த் வீர் சுர்ரியவன்ஷி ஜிம்மில் பயிற்சி செய்துகொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான க்குசும் (Kkusum), வாரிஸ் மற்றும் சூர்யபுத்ர கர்ண் ஆகியவற்றில் சித்தான்த் நடித்த பாத்திரங்களுக்காக, அவர் நன்கு அறியப்பட்டவர். அவர் கடைசியாக சோனி எஸ்ஏபி ஷோ ஜித்தி தில் மானே நாவில் காணப்பட்டார். அவர் இதற்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான Kyun Rishton Main Katti Batti இல் நேஹா மர்தாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

46 வயதாகும் நடிகர் ஆனந்த் சூர்யவன்ஷிக்கு, உடற்பயிற்ச்சியின் போது மாரடைப்பு ஏற்படுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமீப காலங்களில் ஜிம்மில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஆனந்த சூர்யவன்ஷி உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வ காரணங்கள் எதுவும் இதுவரை கூறப்படவில்லை. 

View this post on Instagram

A post shared by Salil Ankola (@salilankola)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com