தொடர் இழுபறி: மகாராஷ்டிராவில் அடுத்து என்ன நடக்கலாம்..?

தொடர் இழுபறி: மகாராஷ்டிராவில் அடுத்து என்ன நடக்கலாம்..?

தொடர் இழுபறி: மகாராஷ்டிராவில் அடுத்து என்ன நடக்கலாம்..?
Published on

மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக் காலம் நிறைவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அங்கு பாஜக- சிவசேனா கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. ஒருவேளை எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க உரிமைக் கோராவிட்டால் அங்கு என்ன நடக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

மகாராஷ்டிராவில் 14-வது சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு வாரங்களை கடந்துவிட்டன. 13-வது சட்டப்பேரவையின் ஆட்சிக் காலமும் வரும் 9ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. ஆனால் அந்த மாநிலத்தை ஆளப்போவது யார்? என்பது இதுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.

288 தொகுதிகளை கொண்டுள்ள மகாராஷ்டிரா தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை. ஆனால், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

பாஜக-சிவசேனா கூட்டணி பெரும்பான்மைக்கும் அதிகமாக 161 இடங்களில் வெற்றி பெற்றுள்ள போதிலும், அந்த கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. காரணம், ஆட்சியில் மட்டுமல்லாது, முதலமைச்சர் பதவியிலும் சமபங்கு அதிகாரம் வழங்க வேண்டும் என சிவசேனா கட்சி பிடிவாதம் காட்டி வருகிறது. அதாவது 5 ஆண்டு கால ஆட்சிக் காலத்தில் முதல் இரண்டரை ஆண்டுகள் சிவசேனா கட்சியின் ஆதித்ய தாக்கரே-வை முதலமைச்சராக்க வேண்டும் என அக்கட்சி நிபந்தனை‌ வித்துள்ளது. அதேசமயம், தேவேந்திர ஃபட்னாவிஸ் தான் முதலமைச்சராக நீடிப்பார் என பாஜகவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிவசேனா எம்எல்ஏ-க்களை பேரம் பேச பாஜக முயற்சிக்கும் என கூறப்படுவதால், தங்கள் 56 எம்எல்ஏ-க்களை பாதுகாப்பாக RANGSHARDA விடுதியில் சிவசேனா தங்‌க வைத்துள்ளது. இதனிடையே சிவசேனாவின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க உரிமைக் கோர மாட்டோம் என தெரிவித்துள்ள பாஜக, ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை சந்தித்து, சட்ட ரீதியான பிரச்சனை குறித்து ஆலோசித்துள்ளது.

ஒருவேளை மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க எந்த கட்சியும் உரிமைக் கோரவில்லை என்றால், தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற முதல் கட்சியான பாஜகவை, ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசமும் வழங்குவார் என கூறப்படுகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க அந்த கட்சி தவறும் பட்சத்தில், இரண்டாவதாக அதிக இடங்களை பிடித்த சிவசேனா கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் வழங்கப்படும் என தெரிகிறது. அந்தக் கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்க தவறும்பட்சத்தில் மகாராஷ்ட்ராவில் குடியரசு ஆட்சி அமலாக வாய்ப்புள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com