3 மாத குழந்தையின் வயிற்றுக்குள் மற்றொரு குழந்தை: மருத்துவர்கள் அதிர்ச்சி

3 மாத குழந்தையின் வயிற்றுக்குள் மற்றொரு குழந்தை: மருத்துவர்கள் அதிர்ச்சி
3 மாத குழந்தையின் வயிற்றுக்குள் மற்றொரு குழந்தை: மருத்துவர்கள் அதிர்ச்சி

3 மாத குழந்தையின் வயிற்றுக்குள் மற்றொரு ஒட்டுண்ணிக் குழந்தை இருந்தது மருத்துவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சுபாலா மற்றும் சத்யேந்திர யாதவ் தம்பதிக்கு 3 மாதத்திற்கு முன் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் வயிறு தொடர்ந்து வீங்கி வந்துள்ளது. மேலும் குழந்தை வலியால் கதறி அழுது கொண்டே இருந்துள்ளது. அவர்கள் வசிக்கும் ஊரின் அருகில் உள்ள மருத்துவரிடம் காண்பித்த போது, சிறுநீர் பிரச்னையால் இதுபோல் குழந்தையின் வயிறு வீங்குகிறது என்று கூறியுள்ளார். அண்டை வீட்டார்கள், குழந்தையின் வயிற்றில் கட்டி இருக்கலாம் என்று கூறியுள்ளனர். அதனால் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பனாரஸ் ஹிந்து மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையின் வயிற்றில் 1 கிலோ எடை உள்ள ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை (parasitic twin) உள்ளதை கண்டுபிடித்தனர். அதாவது, தாயின் கருவறையில் இரட்டைக் குழந்தைகள் உருவாகும் போது தனித்தனியாக இரு கருப்பைகள் இல்லாமல் இருந்தால், இதுபோல நடக்கும். ஒரே கருப்பையில் வளரும் போது ஒரு குழந்தை ஆதிக்கம் (Dominate) செலுத்தி வேகமாக வளரும், மற்றொரு குழந்தை ஆதிக்கம் செலுத்தும் குழந்தையுடன் ஒட்டிக் கொண்டு, ஊட்டச்சத்துக்களை பெற்று வளரத் துவங்கும். பொதுவாக இதுபோன்ற சூழ்நிலையில் அரைகுறையாக வளரும் குழந்தை, முழுமையாக வளரும் குழந்தையின் உடலின் வெளிபுறம் கை, கால்கள் உள்ளிட்ட உறுப்புகளாக ஒட்டிக்கொண்டு இருக்கும். ஆனால், மிகவும் அரிதாக, நன்கு வளர்ந்த குழந்தையின் வயிற்றுக்குள் வளரும். மருத்துவம் வளர்ந்த பிறகு உலகில் இதுவரை இதுபோல 200 குழந்தைகளுக்கு மட்டுமே நிகழ்ந்துள்ளது.

மருத்துவர்கள் அந்தக் குழந்தையின் வயிற்றில் இருந்த ஒட்டுண்ணி இரட்டையை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர். ஒட்டுண்ணி இரட்டையின் உடல் பாகங்கள் மட்டுமே வயிற்றில் இருந்தன. தற்போது குழந்தை நன்றாக உள்ளதாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ஷர்மா கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com