\
தப்புமா குமாரசாமி அரசு..? - இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

தப்புமா குமாரசாமி அரசு..? - இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

தப்புமா குமாரசாமி அரசு..? - இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
Published on: 

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பே முதலமைச்சர் குமாரசாமி பதவி விலகிவிடுவார் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கர்நாடகாவில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின், 16 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அலுவலகத்தில் அளித்தனர். அதனை கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனையடுத்து தங்கள் பதவி விலகல் கடிதத்தை ‌ஏற்றுக் கொள்ளும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி 15 எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் அவ்வாறு உத்தரவிட முடியாது எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வது குறித்து எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்து கொள்ளலாம் எனக் கூறியது.

இதனையடுத்து இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், கலந்து கொள்ளப் போவதில்லை என அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் அறிவித்து விட்டனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு பெரும்பான்மை கிடைக்காது எனக் கூறப்படுகிறது. எனவே குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமல் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவார் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com