"டெல்லியில் நடந்த தாக்குதலில் சுலைமானிக்கு தொடர்பு" ட்ரம்ப்

"டெல்லியில் நடந்த தாக்குதலில் சுலைமானிக்கு தொடர்பு" ட்ரம்ப்

"டெல்லியில் நடந்த தாக்குதலில் சுலைமானிக்கு தொடர்பு" ட்ரம்ப்
Published on

அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட காசிம் சுலைமானிக்கு டெல்லியில் நடந்த தாக்குதலில் தொடர்பிருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

ஈரான் ராணுவ கமாண்டர் சுலைமானி கொல்லப்பட்டதை நியாயப்படுத்தியுள்ள ட்ரம்ப், இது போரை உருவாக்குவதற்கான தாக்குதல் அல்ல; அதனை நிறுத்துவதற்கான தாக்குதல் என குறிப்பிட்டார். கொல்லப்பட்ட சுலைமானிக்கு டெல்லி, லண்டன் உள்ளிட்ட இடங்களில் நடந்த தாக்குதலில் தொடர்பிருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

டெல்லியில் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி இஸ்ரேல் தூதரக அதிகாரியின் மனைவி சென்ற காரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுலைமானிக்கு தொடர்பிருப்பதையே ட்ரம்ப் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது. இதனிடையே டெல்லியில் நடந்த தாக்குதலில் சுலைமானிக்கு தொடர்பில்லை என இந்தியாவுக்கு ஈரான் தூதர் மறுத்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com