'விமானம் அல்ல; மினி அதிபர் மாளிகை' - அசரவைக்கும் ட்ரம்ப் வருகை தரும் விமானத்தின் வசதிகள்!

'விமானம் அல்ல; மினி அதிபர் மாளிகை' - அசரவைக்கும் ட்ரம்ப் வருகை தரும் விமானத்தின் வசதிகள்!
'விமானம் அல்ல; மினி அதிபர் மாளிகை' - அசரவைக்கும் ட்ரம்ப் வருகை தரும் விமானத்தின் வசதிகள்!

அமெரிக்க அதிபரை ஏற்றிச் செல்லும் விமானத்தின் குறியீட்டுப் பெயர் Air Force One. அமெரிக்க ஏகாதிபத்தியம், அதன் உலகளாவிய செல்வாக்கு ஆகியவற்றின் மிக முக்கியமான அடையாளம் இது. அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான இந்த விமானம், சிறப்பான வடிவமைப்பையும் கட்டமைப்பையும் கொண்டது. அதிபர் மட்டுமே இந்த விமானத்தைப் பயன்படுத்த முடியும்.

1953-ம் ஆண்டு அதிபராக இருந்த ஐஸனாவர் சென்ற விமானத்தின் வழித்தடத்தில் லாக்ஹீட் நிறுவனத்தின் விமானம் ஒன்று பறந்து வந்ததால், விபத்து ஏற்படும் நிலை உருவானது. இந்தச் சிக்கலைத் தவிர்ப்பதற்காக அமெரிக்க அதிபரின் விமானம் மட்டும் ஏர் ஃபோர்ஸ் ஒன் என்ற குறியீட்டுடன் அழைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அன்றிலிருந்து பல வகையான விமானங்கள் அமெரிக்க அதிபரை ஏற்றிச் செல்லும் ஏர் ஃபோர்ஸ் ஒன் சேவைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. 1990-ல் இருந்து போயிங் விசி 25 ஏ என்ற வகையைச் சேர்ந்த இரு விமானங்கள் அதிபர்களின் பயணத்துக்காகப் பயன்பட்டு வருகின்றன. இந்த விமானங்களின் உள்வடிமைப்பு பிரமாண்டமானது.

3 அடுக்குகளாக சுமார் 4 ஆயிரம் சதுர அடி பரப்பு கொண்ட விமானத்தில் கூட்ட அரங்கு, படுக்கையறை, சமையல் அறை, ரகசிய பாதுகாப்பு அறை, விருந்தினர்களுக்கான பகுதி, விளையாட்டு அரங்கு என சிறிய அதிபர் மாளிகையே இருக்கும். தொலைபேசி, கணினி, இணையம் என தகவல் தொடர்பு வசதிகளும் இதில் உண்டு.

அமெரிக்காவில் ஏதாவது நெருக்கடி ஏற்படும்போது, அதிபர் விமானத்தில் பறந்து கொண்டிருந்தால்கூட இந்த வசதிகள் மூலம் உடனடியாக ஆலோசனைகளையும் கட்டளைகளையும் வழங்க முடியும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பறக்கும் அளவுக்கு திறன் கொண்டது இந்த விமானம். தேவைப்பட்டால், வானத்திலேயே எரிபொருள் நிரப்பிக் கொள்ளவும் முடியும். பொழுதுபோக்குக்காக கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளை ஆடவும் இந்த விமானத்தில் வசதி உள்ளது. அதிபரின் பாதுகாப்புக்காக அவருக்கான பிரத்யேக பாதுகாவலர்கள் நவீன ஆயுதங்களுடன் உடன் இருப்பார்கள்.

அமெரிக்கா மீது யாரும் தாக்குதல் நடத்தும் நிலையில், இந்த விமானம் அதிபர் கட்டளை அளிக்கும் மினி Mobile Command Center ஆகவே மாறிவிடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com