கால்வாயில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 26 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 12 பேர் படுகாயமடைந்தனர்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்- பாவ்நகர் மாநில நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. பேருந்தில் சுமார் 60 பேர் இருந்தனர். ரங்கோலா என்ற இடத்தில் இன்று காலை வந்துகொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தில் இருந்து வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 26 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீட்பு பணி நடந்து வருகிறது. மேலும் விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.