இந்தியா
இமாச்சல பிரதேச சுரங்கப்பாதையில் பேருந்து - லாரி மோதி விபத்து
இமாச்சல பிரதேச சுரங்கப்பாதையில் பேருந்து - லாரி மோதி விபத்து
இமாச்சலப் பிரதேசத்தில் சுரங்கப்பாதைக்குள் பேருந்தும், லாரியும் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் படுகாயமடைந்தனர்.
மண்டி மாவட்டத்தில் உள்ள அவுத் சுரங்கப் பாதையில் இந்த விபத்து நிகழ்ந்தது. தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து காரணமாக சுரங்கப் பாதையில் பல மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.