'எங்க கிட்டயே டோல் கட்டணம் கேப்பியா?' - சுங்க ஊழியர்களிடம் சண்டையிட்ட TRS கட்சியினர்!

'எங்க கிட்டயே டோல் கட்டணம் கேப்பியா?' - சுங்க ஊழியர்களிடம் சண்டையிட்ட TRS கட்சியினர்!
'எங்க கிட்டயே டோல் கட்டணம் கேப்பியா?' - சுங்க ஊழியர்களிடம் சண்டையிட்ட TRS கட்சியினர்!

தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினரும் சுங்கச்சாவடி ஊழியர்களும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

சாத்நகர் சுங்கச்சாவடி வழியாக காரில் சென்ற தெலங்கனா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த நிர்வாகிகளிடம், அங்கு பணியாற்றும்
ஊழியர் ஒருவர் சுங்கக் கட்டணம் கேட்டதாக தெரிகிறது. இதனால், கட்சியினருக்கும், ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மேலும், சுங்கச்சாவடி அறை ஒன்றின் கண்ணாடியும்
சேதமானது. இது தொடர்பாக, இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com