இந்தியா
திரிபுரா: பாஜக, இடதுசாரிகள் இடையே மோதல் பதற்றம்
திரிபுரா: பாஜக, இடதுசாரிகள் இடையே மோதல் பதற்றம்
திரிபுராவில் பாஜக மற்றும் இடதுசாரிகள் இடையே மோதல் நீடிப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
திரிபுரா முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான மாணிக் சர்கார் கடந்த 6ஆம் தேதி தன்பூர் தொகுதிக்கு செல்ல முயன்ற போது பாஜகவினர் தடுத்து நிறுத்தி தாக்க முயன்றதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து பாஜகவினருக்கும், இடதுசாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக மாறியுள்ளது. அகர்தலாவில் உள்ள இடதுசாரிகளின் அலுவலகம் மற்றும் சில பத்திரிகை அலுவலகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இதில் பலர் காயமடைந்திருப்பதாகவும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இரு தரப்பினரும் மாறி மாறி புகார் அளித்து வருவதால் காவல்துறையினர் வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.