திரிபுரா: மூங்கில் ஏற்றிவந்த லாரியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்தல்.!

திரிபுரா: மூங்கில் ஏற்றிவந்த லாரியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்தல்.!

திரிபுரா: மூங்கில் ஏற்றிவந்த லாரியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்தல்.!
Published on

திரிபுராவில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திரிபுரா அகர்தலாவில் உள்ள ஹவாய் பாரி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மூங்கில் ஏற்றி வந்த வாகனத்தை சோதனை செய்தபோது, ஓட்டி வந்தவர்களின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியதில் முழு சோதனையையும் மேற்கொண்டனர்.

மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரனையில் ஈடுபட்டனர். பின்னர் கடத்தி வரப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கஞ்சாவை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார் அடுத்தகட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com