முத்தலாக்கை பயன்படுத்தி பெண்களும் விவகாரத்து பெறலாம்
முத்தலாக் நடைமுறையை பயன்படுத்தி பெண்களும் விவாகரத்து பெறலாம் என உச்சநீதிமன்றத்தில் அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்குகள் தலைமை நீதிபதி ஜெ.எஸ். கெஹர் தலைமையிலான ஐந்து நபர் அரசியல் சாசன அமர்வு முன் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின்போது, அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல், கடந்த 637ஆம் ஆண்டு முதல் முத்தலாக் நடைமுறையில் இருப்பதாக வாதிட்டார். இது ஒரு திடமான நம்பிக்கை என்பதால், இதனை இஸ்லாம் மதத்திற்கு புறம்பானது என்று எப்படிக் கூற முடியும் என்றும் அவர் வினவினார். முத்தலாக் நடைமுறையை பயன்படுத்தி பெண்களும் விவாகரத்து பெறலாம் என்றும், இதில் அரசியல் நெறிமுறைகள் பற்றியோ சரிசமம் குறித்தோ கேள்வியே எழவில்லை என்றும் கபில் சிபல் வாதாடினார்.