முத்தலாக் மசோதா : மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு
முத்தலாக் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
முத்தலாக் தடை மசோதா விவகாரத்தில் மக்களவையில் வரவேற்பு தெரிவித்திருந்த அதிமுக, இன்று மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்தது. முத்தலாக் மசோதாவில் உள்ள பிரிவுகள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் உள்ளது என்று, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
முத்தலாக் மசோதா மீதான விவாதத்திற்கு பிறகு மாலை 5.10 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெறவிருந்தது. இந்நிலையில் அதிமுக உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சசிகலா புஷ்பா தவிர, 10 மாநிலங்களவை உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் எனத் தெரிகிறது. இதனால் 10 வாக்குகளை மத்திய அரசு இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் எதிர்த்தும் வாக்களிக்கப்போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.