பட்ஜெட்டைப் புறக்கணிக்கும் திரிணாமுல் காங்கிரஸ்
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாட்களைப் புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் மேற்குவங்கத்தில் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்வதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பட்ஜெட் கூட்டதொடரின் முதல் 2 நாட்களைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் கைது உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.