\
பெகாசஸ் உளவு விவகாரம்: மத்திய அமைச்சரின் அறிக்கையை கிழித்தெறிந்தார் திரிணாமூல் எம்.பி

பெகாசஸ் உளவு விவகாரம்: மத்திய அமைச்சரின் அறிக்கையை கிழித்தெறிந்தார் திரிணாமூல் எம்.பி

பெகாசஸ் உளவு விவகாரம்: மத்திய அமைச்சரின் அறிக்கையை கிழித்தெறிந்தார் திரிணாமூல் எம்.பி
Published on

மாநிலங்களவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெகாசஸ் விவகாரம் குறித்து பேச எழுந்தவுடன், திரிணாமுல் எம்.பி. சாந்தனு சென் அவது ஆவணங்களை பறித்து, கிழித்து, துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கை நோக்கி தூக்கி எறிந்தார்.

இதன் காரணமாக ஏற்கனவே இரண்டுமுறை ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை மூன்றாவது முறையாக நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று  மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் பெகாசஸ் விவகாரம் கடுமையாக எதிரொலித்தது. இதற்காக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற அவைக்குள் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினார்கள்.

இது குறித்து பேசிய ஆர்ஜேடி உறுப்பினர் மனோஜ் ஜா, “மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரின் அணுகுமுறை "துரதிர்ஷ்டவசமானது" . இத்தனை சலசலப்புகளுக்கு மத்தியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஒரு அறிக்கையை வெளியிட்ட விதம், இந்த பிரச்சினையை கேலி செய்ய மட்டுமே அரசாங்கம் விரும்பியதாக தெரிகிறது" என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com