சிலைக் கடத்தல் வழக்குகளுக்கு சிறப்பு அமர்வு

சிலைக் கடத்தல் வழக்குகளுக்கு சிறப்பு அமர்வு

சிலைக் கடத்தல் வழக்குகளுக்கு சிறப்பு அமர்வு
Published on

சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி ஆர்.மகாதேவன் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் மூலவர் மற்றும் உற்சவர் சிலைகள் திருடப்பட்டு, அதற்கு பதில் வேறு சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி ரங்கராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கூறியுள்ள குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணையின் போது சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிப்பதற்காக தனி அமர்வு அமைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி ஆர்.மகாதேவன் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com