\
ஜார்க்கண்ட்: 22 வயதான இரண்டாவது மனைவியை 18 துண்டுகளாக வெட்டிக் கொன்ற கணவர்

ஜார்க்கண்ட்: 22 வயதான இரண்டாவது மனைவியை 18 துண்டுகளாக வெட்டிக் கொன்ற கணவர்

ஜார்க்கண்ட்: 22 வயதான இரண்டாவது மனைவியை 18 துண்டுகளாக வெட்டிக் கொன்ற கணவர்
Published on

தனது இரண்டாவது மனைவியை 18 துண்டுகளாக வெட்டிக் கொலைசெய்த வழக்கில் அப்பெண்ணின் கணவனை ஜார்க்கண்ட் போலீசார் கைதுசெய்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்திலுள்ள பழமையான பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் தில்தார் அன்சாரி. இவருடைய இரண்டாவது மனைவி ரூபிகா பஹாதி(22). இந்நிலையில் கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட சண்டையில் தில்தார், ரூபிகாவை கொலைசெய்து 18 துண்டுகளாக வெட்டியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில், ரூபிகாவின் மரணத்தில் தில்தாருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து அவரை கைதுசெய்துள்ளனர். இதுவரை வெட்டப்பட்ட உடற்பாகங்களில் 12 பாகங்கள் கிடைத்துள்ள நிலையில், காணாமல்போன பாகங்களை போலீசார் தேடிவருகின்றனர்.

இதுகுறித்து டிஐஜி சுதர்ஷன் பிரசாத் மாண்டல் கூறுகையில், “கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட சண்டையில், அந்தப் பெண் 18 துண்டுகளாக வெட்டப்பட்டுள்ளார். தற்போது வரை நடத்தப்பட்ட விசாரணையில், கொலையில் பெண்ணின் கணவருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்ததை அடுத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த கொலைகுற்றத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது” என்று தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com