இலைகளால் ஆன முகக்கவசத்தை அணிந்த பழங்குடியினர் !

இலைகளால் ஆன முகக்கவசத்தை அணிந்த பழங்குடியினர் !

இலைகளால் ஆன முகக்கவசத்தை அணிந்த பழங்குடியினர் !
Published on

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக, தெலங்கானாவில் உள்ள பழங்குடியின மக்கள் இலைகளால் ஆன முகக் கவசத்தை அணிந்திருக்கும்
புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா தொற்று காரணமாக மருத்துவ முகக் கவசங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தெலங்கானாவில் உள்ள பழங்குடியின மக்கள்,
கொரோனா பரவுவது குறித்து ரேடியோக்களில் ஒலிப்பரப்பாகும் செய்திகள் மூலம் அறிந்துள்ளனர். கிராம தலைவர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து
கொண்ட அவர்கள், இலைகளால் தயாரிக்கப்பட்ட முகக் கவசத்தை அணிந்து இருந்தனர்.

கிருமி நாசினி மற்றும் மருத்துவ முகக் கவசங்களை வழங்க வேண்டும் என பழங்குடியின மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இலைகளால்
ஆன முகக் கவசங்களை அணிந்த பழங்குடியினர் மருத்துவ முகக் கவசங்கள் வழங்கக் கோரிக்கை எழுந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 870க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில்
மட்டும் 149 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 180 பேருக்கு வைரஸ் தொற்று
ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டதை அடுத்து பலி எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நோய் பாதிப்பில்
இருந்து குணமடைந்து 79 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com