மலையேற்றத்திற்கு கர்நாடகாவிலும் தடை

மலையேற்றத்திற்கு கர்நாடகாவிலும் தடை

மலையேற்றத்திற்கு கர்நாடகாவிலும் தடை
Published on

குரங்கணி காட்டுத்தீ விபத்து எதிரொலியாக கர்நாடகாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மலையேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் திருப்பூர் மற்றும் சென்னையை சேர்ந்த இரண்டு குழுவினர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். 39 பேர் கொண்ட குழுவில் 3 பேர் நீங்கலாக 36 பேர் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்றம் சென்ற 30-க்கும் மேற்பட்டோர் சிக்கினர். காட்டுத் தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், குரங்கணி காட்டுத்தீ விபத்து எதிரொலியாக கர்நாடகாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மலையேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மழைக்காலம் வரும் வரை மலையேற்றம் செய்ய கர்நாடக அரசு தடைவிதித்துள்ளது.முன்னதாக கேரள அரசும் வனப்பகுதிகளில் மலையேறுவதற்குத் தடை விதித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com