இந்தியா
செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை: ஆந்திரா அரசு மருத்துவமனையில் அவலம் #Video
ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவமனையொன்றில், மின்வெட்டு பிரச்னையால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா பார்வதி மன்யம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுவதால் நோயாளிகள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மின்சாரம் இல்லாததால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு, செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆந்திரா அரசு மருத்துவமனை
இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின்வெட்டு குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர்.