“கையில் பணமில்லாமல் மக்கள் எப்படி வீட்டிலேயே இருப்பார்கள்” - ப.சிதம்பரம்

“கையில் பணமில்லாமல் மக்கள் எப்படி வீட்டிலேயே இருப்பார்கள்” - ப.சிதம்பரம்
“கையில் பணமில்லாமல் மக்கள் எப்படி வீட்டிலேயே இருப்பார்கள்” - ப.சிதம்பரம்

வீட்டிலிருப்பதற்கும் ஏழை மக்களுக்கு பணம் தேவை எனவும், அதனை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறையின் நியூஸ் 360 நிகழ்ச்சியில் தொலைபேசி வாயிலாக பிரத்யேகப் பேட்டியளித்த ப.சிதம்பரம், ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏழை, எளிய மக்கள் பாதிப்பதாக கூறினார். இதனால் மத்திய அரசு அவர்களுக்கு உதவும் வகையில் பணப்பரிமாற்றத் திட்டத்தை உருவாக்கி, 5 லட்சம் கோடியை ஒதுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த பணம் 6 மாத காலத்திற்கு தேவைப்படும் எனவும், பணத்தை திரட்டத் தேவையில்லை அது அரசிடமே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், பணத்தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வது என தான் கட்டுரைகள் மற்றும் சுட்டுரைகள் மூலம் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.

முன்னதாக, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி 21 நாட்களுக்கு பிறப்பித்துள்ளார். இதனால் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் வசிக்கும் பணியாளர்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். ஏடிஎம் மையங்களில் அதிகப்படியான பணங்கள் எடுக்கப்படுகின்றன. இருப்பினும் ஏடிஎம் மையங்கள் வழக்கம்போல செயல்படும் எனவும், போதிய அளவு பணம் நிரப்படும் எனவும் மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com