\
ஆந்திரா: எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

ஆந்திரா: எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

ஆந்திரா: எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
Published on: 

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கொனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

குவஹாத்தி நோக்கி சென்றுகொண்டிருந்த அதிவிரைவு ரயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக படுவா என்ற கிராமத்தில் நேற்று நின்றதாகத் தெரிகிறது. அப்போது ஒரு சிலர் ரயிலிலிருந்து இறங்கி பக்கத்து தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர் திசையில் வந்த கொனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது அதிகவேகமாக மோதியதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வருத்தம் தெரிவித்துள்ளார். மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com