டெல்லியில் கடும் பனிமூட்டம்... விமான, ரயில் சேவைகள் பாதிப்பு

டெல்லியில் கடும் பனிமூட்டம்... விமான, ரயில் சேவைகள் பாதிப்பு

டெல்லியில் கடும் பனிமூட்டம்... விமான, ரயில் சேவைகள் பாதிப்பு
Published on

பனிமூட்டம் காரணமாக தலைநகர் டெல்லியில் விமான சேவை மற்றும் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாகவே, காலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமான பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை ஏற்பட்டுள்ள பனிமூட்டம் காரணமாக, ‌டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், டெல்லி ரயில் நிலையத்தி‌ல் இருந்து புறப்படவேண்டிய 25 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com