18 வயது இளைஞர் ரயில் மோதி உயிரிழப்பு: உயிரைப் பறித்ததா செல்ஃபி?

18 வயது இளைஞர் ரயில் மோதி உயிரிழப்பு: உயிரைப் பறித்ததா செல்ஃபி?
18 வயது இளைஞர் ரயில் மோதி உயிரிழப்பு: உயிரைப் பறித்ததா செல்ஃபி?

டெல்லியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது 18 வயது இளைஞர் ரயில் மோதி உயிர் இழந்துள்ளார்.

புதுடெல்லியில் சீலம்பூர் பகுதியை சேர்ந்த அர்பாஸ் கான் என்பவர் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி பரிபாதபமாக உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தண்டவாளத்தின் அருகே கிடந்த அர்பாஸ் கான் உடலை பார்வை இட்டனர். அப்போது அவரின்  கையில் செல்ஃபோன் வைத்திருந்ததாகவும் அதில் இயர்ஃபோனும் இணைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த இளைஞர் தண்டவாளத்தை கடக்கும்போது இசை கேட்டுக்கொண்டு சென்றிருக்கலாம் அல்லது செல்ஃபி எடுத்து கொண்டிருக்கும்போது விபத்து நேர்ந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்தினை ஆராய்ந்த வரையில் தற்கொலைக்கான தடயங்கள் இல்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இதனடிப்படையில் இந்தியாவில் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது ஏற்படும் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com