ட்ராய் புதிய விதிமுறைகள் மார்ச் வரை நீட்டிப்பு

ட்ராய் புதிய விதிமுறைகள் மார்ச் வரை நீட்டிப்பு

ட்ராய் புதிய விதிமுறைகள் மார்ச் வரை நீட்டிப்பு
Published on

கட்டண சேனல்கள் தொடர்பாக ட்ராய் வகுத்துள்ள புதிய விதிமுறைகளை செயல்படுத்துவதற்கான கால அவகாசம் மார்ச் 31-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கட்டண சேனல்களை முறைப்படுத்தும் வகையில் சந்தாதாரர்கள் பார்க்க விரும்பும் சேனல்களுக்கு மட்டுமே கட்டணம் செலுத்தும் புதிய விதிமுறையை ட்ராய் அறிமுகப்படுத்தியது. பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்த இந்தப் புதிய விதிமுறைகள் குறித்து ட்ராய், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் டிடிஎச் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தியது.

அப்போது கேபிள் டிவி சந்தாதாரர்களில் பலர் புதிய விதிமுறைக்கு மாறாதது தெரியவந்தது. இதையடுத்து சந்தாதாரர்கள் தற்போது வழங்கும் பணத்துக்கு சமமான வகையில், ஒரு திட்டத்தை வகுக்க கேபிள் டிவி நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட ட்ராய், புதிய விதிகளை செயல்படுத்துவதற்கான கால அவகாசத்தை மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com