உத்தரகாண்ட் மாநிலத்தில் கல்லால் அடித்து கொள்ளும் வினோத திருவிழா நடைபெற்றது.
உத்தரகண்ட் மாநிலம் சம்பவட் மாவட்டத்தில் உள்ள ஆலயம் ஒன்றில், ரக்ஷா பந்தனை முன்னிட்டு பாரம்பரிய கல்லெறித் திருவிழா என்னும் பக்வல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு, ஒரு தரப்பினர் கற்களை எறிய, எதிர் தரப்பினர் மூங்கிலால் செய்யப்பட்ட கேடயங்களைக் கொண்டு தடுத்தனர். இந்நிகழ்ச்சியின்போது, 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கல்லடிபட்டது தாங்கள் செய்த அதிர்ஷ்டம் என்றும், தங்களது ரத்தம் கடவுளுக்கு காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளதால் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், காயமடைந்த பக்தர்கள் தெரிவித்தனர்.