பிரபல கார் தொழிலதிபர் ரீட்டா தற்கொலை ! கணவருடன் பிரச்னை?

பிரபல கார் தொழிலதிபர் ரீட்டா தற்கொலை ! கணவருடன் பிரச்னை?

பிரபல கார் தொழிலதிபர் ரீட்டா தற்கொலை ! கணவருடன் பிரச்னை?
Published on

சென்னையில் கார் ஷோரூம் நிறுவன இணைத் தலை‌வர்‌‌ ரீட்டா ஜானகி லங்காலிங்கம் தற்கொலை செய்து கொண்டார்.

லான்சன் டொயோட்டா ஷோரூம் இணை தலைவராக இருந்து வந்தவர் ரீட்டா ஜானகி லங்காலிங்கம். இவர்‌ சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்‌. இதையடுத்து உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். க‌‌ணவர் லங்காலிங்கத்துடன் ரீட்டா சண்டை போட்‌டதால் அவர் வெளியே தங்கியிருந்ததாக‌ கூறப்படுகிறது. இதனால் ம‌னமுடைந்த ரீட்டா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. 

அதேநேரத்தில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதற்கு தொழில்ரீதியான பிரச்னை காரணமா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவல்லிக்கேணி துணை ஆணையர் சுகுணா சிங், நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி உள்ளிட்ட அதிகாரிகள், தொழிலதிபர் ரீட்டாவின் மரணம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com