ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகில் உள்ள நகரத்துக்கு இந்துக் கடவுள் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக, ஜப்பான் தூதர் டகாயுகி கிடாகவா தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறும்போது, ’டோக்கியோ அருகில் உள்ள நகரத்துக்கு இந்து கடவுள், லட்சுமியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதை சொன்னால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். அந்த நகரத்தின் பெயர் கிஜ்ஜியோஜி. இதற்கு ஜப்பானிய மொழியில் லட்சுமி கோயில் என்று பெயர்.
ஜப்பான் சமூகத்திலும் வாழ்க்கையிலும் இந்திய கலாசாரத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. அதிகமான இந்து கடவுள்கள் ஜப்பானில் வணங்கப்படுகிறார்கள். பல வருடங்களாக நாங்கள் இந்து கடவுள்களை பூஜித்து வருகிறோம். ஜப்பானிய மொழியி லும் இந்திய மொழிகளின் ஆதிகம் அதிகம் இருக்கிறது. உதாரணமாக, ஜப்பானிய உணவான சுசி, அரிசி மற்றும் வினிகரில் உருவாக்கப்படுகி றது. இது ஷாரியுடன் தொடர்புடையது. இந்த ஷாரி, சமஸ்கிருத வார்த்தையான ஸாலி (அரிசி)யில் இருந்து உருவானது.
சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் ஐநூறுக்கும் அதிகமான ஜப்பானிய வார்த்தைகளை கண்டுபிடிக்க முடியும். இந்திய கலாசாரம் மட்டுமல்ல, இந்திய மொழிக ளும் ஜப்பானில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதற்கு இது உதாரணம்’ என்றார்.