புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள்
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பரவல் காரணமாக பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், புதுச்சேரியில் தடை ஏதும் விதிக்கப்படவில்லை. அதேநேரத்தில், கொண்டாட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் உள்ள விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். மேலும், நட்சத்திர விடுதிகள், தனி நிகழ்ச்சிகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: "நேரம் வீணாகி விட்டது; இனி புதிய இந்தியாவுக்கு பணியாற்றுங்கள்" - பிரதமர் மோடி