\
total share market value has fallen by Rs 8 lakh crore in a single day
total share market value has fallen Reuters

பெரும் அபாயத்தில் இந்தியா : ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி சரிவு.. என்ன நடக்கிறது சந்தையில்?

இந்திய பங்கு சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதால் ஒரே நாளில் மொத்த சந்தை மதிப்பு ரூ.8 லட்சம் கோடி சரிந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 

இந்த வாரம் பங்குச்சந்தையின் முதல் நாளான செப்டம்பர் 28-ம் தேதி இந்திய பங்குச்சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,124 புள்ளிகள் சரிந்து 72,772 ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 360 புள்ளிகள் சரிந்து 22,780 ஆகவும் முடிந்தது. இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.8 லட்சம் கோடி சரிந்து ரூ.474 லட்சம் கோடியாக குறைந்து அதிர்ச்சியளித்தது.

அதேபோல, நேற்றும் தேசிய பங்குசந்தையான நிப்டி தொடக்கத்தில் கடுமையான சரிவை சந்தித்தது. எனினும் பிற்பகலில் அதில் இருந்து சற்று மீண்டு 64 புள்ளிகள் குறைவோடு 22,716 ஆக முடிவடைந்தது. அதேபோல, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 242 புள்ளிகள் குறைந்து 72, 529 ஆக முடிவடைந்தது.

share market
share marketReuters

இந்திய பங்குச்சந்தை சமீபத்திய ஆண்டுகளில் தொடர் சரிவை சந்தித்து வருவது முதலீட்டார்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர், ஈரான் - அமெரிக்கா போர், இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரிகள் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவற்றால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளிலிருந்து தங்களது முதலீடுகளைத் திரும்பப் பெற்று வருகின்றனர். மேலும் பங்குச்சந்தை தொடர்ந்து சரிவைச் சந்திக்கும்போதெல்லாம், சந்தையின் பெரும்பான்மையினர்களான குறுகிய கால முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சமும் தொற்றிக்கொள்வதால் அவர்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். பங்கு சந்தையின் சரிவுக்கு இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

Reuters

மேலும் இந்திய நிறுவனங்களின் லாபம் எதிர்பார்த்ததை விட குறைந்ததும் இந்திய பங்குச்சந்தை சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதே நேரம் இது வொலாட்டிலிட்டி (Volatility) எனப்படும் பங்கு சந்தையின் ஏற்ற இறக்கம் மட்டுமே என்றும், Crash எனப்படும் சந்தை வீழ்ச்சி கிடையாது என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். ஈரான் - அமெரிக்கா போர் முடிவடைந்து ரூபாயின் மதிப்பு அதிகரிக்க தொடங்கினால் மீண்டும் இந்திய பங்குச்சந்தை சரிவில் இருந்து மீண்டு வளர்ச்சி நிலைக்கு செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

total share market value has fallen by Rs 8 lakh crore in a single day
112 ஆண்டில் இதுதான் முதல்முறை : இயற்கையில் நிகழ்ந்த அசாதாரண மாற்றம்.. ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள் !
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com