தமிழகத்தில் மொத்தம் 92,978 இலங்கை தமிழ் அகதிகள் உள்ளனர்: உள்துறை அமைச்சகம்

தமிழகத்தில் மொத்தம் 92,978 இலங்கை தமிழ் அகதிகள் உள்ளனர்: உள்துறை அமைச்சகம்
தமிழகத்தில் மொத்தம் 92,978 இலங்கை தமிழ் அகதிகள் உள்ளனர்: உள்துறை அமைச்சகம்

தமிழகத்தில் முகாம்கள் மற்றும் முகாமில் அல்லாத இலங்கை தமிழ் அகதிகள் 92,978 பேர் உள்ளனர் என இந்திய உள்த்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இலங்கை தமிழ் அகதிகள் பற்றி பதிலளித்துள்ள மத்திய உள்த்துறை அமைச்சகம் “தமிழ்நாடு அரசாங்கத்தின் தகவல்களின்படி, 58,843 இலங்கை தமிழ் அகதிகள் தமிழகத்தில் 108 முகாம்களில் தங்கியுள்ளனர். மேலும் இலங்கை தமிழ் அகதிகள் 34,135 பேர் தமிழகத்தில் முகாமில் இல்லாத அகதிகளாக தங்கியிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் உள்ளூர் காவல்துறையில் பதிவு செய்துள்ளனர். மேலும் 54 இலங்கை தமிழ் அகதிகள் ஒடிசாவின் மல்கன்கிரியில் உள்ள அகதி முகாமில் தங்கியிருக்கிறார்கள்” என தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com