இந்தியாவில் 31 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 31 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 31 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு
Published on

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ளது.

நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துக்கொண்டே வருகின்றன.

இந்தியாவை பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,974 லிருந்து 31,332 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,027 லிருந்து 7,696 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 937 லிருந்து 1,007 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக கருதப்படும் மகாராஷ்டிராவில் இதுவரை 9,318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com