ட்ரெண்டில் த்ரீ பெயில்டு இயர்ஸ்.....மோடி அரசை விமர்சித்து வைரலாகும் மீம்ஸ்-கள்..!

ட்ரெண்டில் த்ரீ பெயில்டு இயர்ஸ்.....மோடி அரசை விமர்சித்து வைரலாகும் மீம்ஸ்-கள்..!
ட்ரெண்டில் த்ரீ பெயில்டு இயர்ஸ்.....மோடி அரசை விமர்சித்து வைரலாகும் மீம்ஸ்-கள்..!

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்று இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்து 4-ஆம் ஆண்டு பிறக்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடியின் 3 ஆண்டுகால ஆட்சி தோல்விதான் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். #3FailedYears என்கிற ஹேஷ்டேக் ட்டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசை விமர்சித்து எண்ணற்ற மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நாட்டில் நக்சலைட்டுகள் இல்லாமல் போவார்கள் என மத்திய அரசு கூறியிருந்ததாகவும் ஆனால் அதன் பின்தான்பாதுகாப்பு படை வீரர்களை நக்சலைட்டுகள் கொலை செய்தனர் என்கிறது ஒரு மீம்ஸ்.

தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், வேலை வாய்ப்பின்மை குறித்தும் அவர் வாயை திறப்பதில்லை என்கிறது மற்றொரு மீம்ஸ்.

இதுதவிர, மேக் இன் இந்தியாவின் லோகோவில் உள்ள சிங்க படத்தை அகற்றிவிட்டு அதில் கழுதை படம் இடம்பெறுவது போன்றும் மீம்ஸ்-கள் உலா வருகின்றன. 2015-ஆம் ஆண்டு திறன் இந்தியா திட்டம் (Skill India Program) செயல்படுத்தப்பட்டதாகவும், இதில் 5,80,000 பேர் பயின்றதாகவும், ஆனால் அவர்களில் வெறும் 82,000 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளதாவும் மீம்ஸ்-கள் புள்ளி விபரம் போட்டு பொளந்து கட்டுகின்றன. வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதில் பிரதமர் மோடி தோற்றுவிட்டதாகவும் விமர்சிக்கப்படுகின்றன.

மேலும் பிரதமர் மோடியின் 3 ஆண்டுகால ஆட்சி எப்படி இருக்கிறது என ட்விட்ரில் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு 10 சதவிகித மக்கள் மோசம் என்றும் 11 சதவிகித மக்கள் அதிமோசம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 69 சதவிகித மக்கள் இதுவரை இல்லாத அளவு மோசம் என்றும், 10 சதவிகித மக்கள் இதைவிட மோசமாக இருக்க முடியாது என்றும் கூறியுள்ளதாக மீம்ஸ்-கள் வருகின்றன. இதுபோன்ற எண்ணற்ற மீம்கள் வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com