டாப் 10 செய்திகள்: பொங்கல் கொண்டாட்டம் முதல் மீண்டும் ட்ரம்ப் பதவி நீக்கம் தீர்மானம் வரை!

டாப் 10 செய்திகள்: பொங்கல் கொண்டாட்டம் முதல் மீண்டும் ட்ரம்ப் பதவி நீக்கம் தீர்மானம் வரை!
டாப் 10 செய்திகள்: பொங்கல் கொண்டாட்டம் முதல் மீண்டும் ட்ரம்ப் பதவி நீக்கம் தீர்மானம் வரை!

இன்றைய டாப் செய்திகளில் சில...

 • தமிழகம் முழுவதும் தைத்திருநாள் கொண்டாட்டம். இன்று தமிழகம் முழுவதும் தைத்திருநாள் கொண்டாட்டம் கோலாகலமாகத் துவங்கியுள்ளது. புதுப்பானையில் பொங்கலிட மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
 • பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரத்தில் காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கவிருக்கிறது. காளைகளும் காளையரும் களமாட வாடிவாசலில் தயார் நிலையில் இருக்கின்றனர்.
 • பொங்கல் திருநாளுக்கு வணக்கம் கூறி பிரிட்டனர் பிரதமர் போரிஸ் ஜான்சன் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். மேலும் பெருந்தோற்று காலத்தில் சேவையாற்றும் தமிழ் மருத்துவர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.
 • வெளியூர்களில் வேலைசெய்பவர்களுக்கு போதிய பேருந்துகள் இல்லாததால் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் காத்திருந்ததாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.
 • தொடர்மழையால் லட்சக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. செய்வதறியாது தவித்து வருகின்றனர் டெல்டா மாவட்ட விவசாயிகள்.
 • அணைகள் நிரம்பியதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
 • குமரிக் கடல் பகுதியில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது
 • அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக மீண்டும் பதவி நீக்கம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  குடியரசு கட்சி உறுப்பினர்கள் 10 பேர் அவருக்கு எதிராக வாக்களித்தனர்.
 • அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்வையிட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மதுரை வருகிறார். சென்னையில் நடைபெறவுள்ள நம்ம ஊரு பொங்கல் விழாவில் பாரதிய ஜனதா தேசிய தலைவர் நட்டா பங்கேற்கிறார்.
 • 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம் என்று அறித்திருக்கிறது.
 • சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மகரஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com