TopNews | மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை... தொடரும் இஸ்லாமியர்கள் போராட்டம்... இன்னும் சில முக்கியச் செய்திகள்!

Published on

இரண்டு நாள் விடுமுறைக்குப் பின்பு இன்று மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை. சிஏஏ போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பும் என்பதால் பரபரப்பு

எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திலிருந்து பின் வாங்கமாட்டோம். வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம். பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என இஸ்லாமிய அமைப்பினர் அறிவிப்பு

இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். போராட்டக்காரர்களை சந்தித்துப்பேசிய பின் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால். மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1765 ஆக அதிகரிப்பு. சிறப்பு விமானம் மூலம் இந்தியா வந்தவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை. புள்ளிகள் பட்டியலில் முன்னேறி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com