TopNews | டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி... ஒயிட்வாஷ் ஆன இந்தியா... இன்னும் சில முக்கியச் செய்திகள்!

TopNews | டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி... ஒயிட்வாஷ் ஆன இந்தியா... இன்னும் சில முக்கியச் செய்திகள்!
TopNews | டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி... ஒயிட்வாஷ் ஆன இந்தியா... இன்னும் சில முக்கியச் செய்திகள்!

டெல்லி சட்டசபை தேர்தலில் 62 இடங்களை பிடித்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது ஆம் ஆத்மி கட்சி. பாஜக 8 இடங்களை கைப்பற்றியது. 63 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது காங்கிரஸ்

மக்களுக்கு கிடைத்த வெற்றி என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பெருமிதம். மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்பதாக பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் கருத்து

டெல்லியில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி எம்எல்ஏவின் கார் அணிவகுப்பின் மீது துப்பாக்கிச்சூடு. கட்சித் தொண்டர் ஒருவர் உயிரிழப்பு. விசாரணை நடத்த எம்எல்ஏ நரேஷ் யாதவ் வலியுறுத்தல்

காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த நெடுவாசல் விவசாயிகள். போராட்டத்தின்போது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி

மாநிலங்களவையிலிருந்து திமுக கூட்டணி எம்பிக்கள் வெளிநடப்பு. தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என கோரிக்கை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை அணுக தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல். உடனடியாக ஆளுநரை சந்தித்து வலியுறுத்துமாறு, மு.க.ஸ்டாலின் அறிக்கை

நடிகர் விஜயின் ஆடிட்டர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர். சம்மன் அனுப்பியதை தொடர்ந்து பைனான்சியர் அன்புச்செழியனின் ஆடிட்டரும் ஆஜரானார்

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1110 ஆக அதிகரிப்பு. தமிழகத்தில் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் என்ன என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் தோல்வியை தழுவியது இந்திய அணி. 31 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளிலும் தோல்வி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com