பட்ஜெட் செலவினங்களில் முதலிடம்.. டாப் 10 இந்திய மாநிலங்கள்!!
நாட்டிலேயே மக்கள்தொகை மிகுந்த மாநிலமான உத்தர பிரதேசம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 696 கோடி ரூபாய் பட்ஜெட் செலவின மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் 8 லட்சத்து 33 ஆயிரத்து 993 கோடி ரூபாய் மதிப்புடன் 2ஆவது இடத்தில் உள்ளது.
நாட்டிலேயே பரப்பளவில் பெரிய மாநிலமான ராஜஸ்தானின் பட்ஜெட் செலவின மதிப்பு 6 லட்சத்து 10 ஆயிரத்து 956 கோடி ரூபாயாக உள்ளது. 4 லட்சத்து 72 ஆயிரத்து 585 கோடி ரூபாய் பட்ஜெட் செலவின மதிப்புடன் தமிழ்நாடு 4ஆவது இடத்தில் உள்ளது.
கர்நாடகாவின் பட்ஜெட் செலவினம் 4 லட்சத்து 48 ஆயிரத்து 4 கோடியாகவும் மேற்கு வங்காளத்தின் பட்ஜெட் செலவினம் 4 லட்சத்து 38 ஆயிரத்து 775 கோடி ரூபாயாகவும் உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் பட்ஜெட் செலவின மதிப்பு 4 லட்சத்து 23 ஆயிரத்து 360 கோடி ரூபாயாக உள்ளது. பட்ஜெட் செலவுகளில் குஜராத் 4 லட்சத்து 3 ஆயிரத்து 374 கோடி ரூபாயுடன் 8ஆவது இடத்திலும், கேரளம் 3 லட்சத்து 67 ஆயிரத்து 531 கோடி ரூபாயுடன் 9ஆவது இடத்திலும் உள்ளன. பிகாரின் பட்ஜெட் செலவின மதிப்பு 3 லட்சத்து 47 ஆயிரத்து 590 கோடி ரூபாயாக உள்ளது.

