top 10 goods india exports on usa
இந்தியா - அமெரிக்காமாதிரிப்படம்

அமெரிக்காவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி.. டாப் 10 பொருட்கள் எவை?

அமெரிக்காவிற்கு இந்தியா அதிகளவு ஏற்றுமதி செய்யும் முதல் 10 பொருட்கள் என்னென்ன... எவ்வளவு மதிப்புக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது என்பதை தற்போது காணலாம்.
Published on

அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது வைரம். கடந்த நிதியாண்டில் மட்டும் 10.2 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதிகள் நடைபெற்றிருந்தன. 7.44 பில்லியன் டாலர் மதிப்புடன் மருத்துவ சாதனங்கள் 2ஆம் இடத்தில் உள்ளன. சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் 4.9 பில்லியன் டாலர் மதிப்பில் 3ஆம் இடத்தில் உள்ளன. 3.66 பில்லியன் டாலர் மதிப்புடன் நகைகள் 3ஆம் இடம் வகிக்கின்றன.

top 10 goods india exports on usa
அமெரிக்காpt web

அரிசி ஒரு பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. வாகன உதிரிப்பாகங்கள் 800 மில்லியன் டாலர் மதிப்புக்கும் ஆடைகள் 750 மில்லியன் டாலர் அளவுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ரசாயனம் சார்ந்த பொருட்கள் 600 மில்லியன் டாலர் அளவுக்கும் இயந்திரங்கள் 550 மில்லியன் டாலர் அளவுக்கும் அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. விவசாய சாதனங்கள் 450 மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதியாகியுள்ளன. இறக்குமதியை பொறுத்தவரை அமெரிக்காவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களில் விமானம் மற்றும் அதன் உதிரிப்பாகங்கள் முதலிடம் வகிக்கிறது.

கடந்த நிதியாண்டில் 8.5 பில்லியன் டாலர் அளவுக்கு அவற்றின் இறக்குமதி நடைபெற்றிருந்தது. மருத்துவச் சாதனங்கள் மற்றும் மருந்துகள் 5.7 பில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதியாகியிருந்தன. ராணுவ மற்றும் பாதுகாப்பு தளவாடங்களை 4.3 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியா இறக்குமதி செய்திருந்தது. பெட்ரோலியம் பொருட்களை 3.8 பில்லியன் டாலர் அளவுக்கும் இந்தியா வாங்குகிறது. பொறியியல் சாதனங்களை 2.6 பில்லியன் டாலர் மதிப்புக்கு இந்தியா வாங்குகிறது.

top 10 goods india exports on usa
இந்தியாஎக்ஸ் தளம்

பிளாஸ்டிக் பொருட்களை 2.1 பில்லியன் டாலர் மதிப்புக்கும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களை 1.9 பில்லியன் டாலர் அளவுக்கும் ரசாயனம் மற்றும் உரங்களை 1.4 பில்லியன் டாலர் அளவுக்கும் இந்தியா வாங்கியிருந்தது. சோலார் போன்ற மரபுசாரா எரிசக்தி பொருட்களை 1.1 பில்லியன் டாலர் அளவுக்கும் தோல் பொருட்களை 0.08 பில்லியன் டாலர் அளவுக்கும் இந்தியாவிடமிருந்து அமெரிக்கா வாங்கியுள்ளது, எனினும் நிகர அளவில் இந்தியாவிடம் இருந்து சுமார் 45 பில்லியன் டாலர்கள் அமெரிக்கா அதிகமாக இறக்குமதி செய்துள்ளது.

top 10 goods india exports on usa
2 மாதங்களுக்குப் பிறகு... அரை சதவீதம் அதிகரித்த இந்தியாவின் ஏற்றுமதி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com