பஞ்சாப் தேர்தல்: 117 தொகுதிகளில் 1,304 வேட்பாளர்கள் போட்டி - ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

பஞ்சாப் தேர்தல்: 117 தொகுதிகளில் 1,304 வேட்பாளர்கள் போட்டி - ஆட்சியை பிடிக்கப்போவது யார்?
பஞ்சாப் தேர்தல்: 117 தொகுதிகளில் 1,304 வேட்பாளர்கள் போட்டி - ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

பஞ்சாப் மாநிலத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

117 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்திற்கு நாளை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. 1304 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் இதில் 237 வேட்பாளர்கள் காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகளை சேர்ந்தவர்களும் சுமார் 250 பேர் அகாலி தளம் போன்ற மாநில கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் உள்ளனர். 362 பேர் பதிவு செய்யப்படாத கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் 461 பேர் புதிய முயற்சிகளாக களத்தில் நிற்கின்றனர். மொத்த வேட்பாளர்களில் 315 பேர் கடுமையான குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். சுமார் 2.14 கோடி வாக்காளர்கள் வாக்கு செலுத்த உள்ளனர்.

மொத்தம் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் 2013 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றம் நிறைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது அதேநேரத்தில் 2 ஆயிரத்து 952 இடங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளாக உள்ளது.

தேர்தலை நேர்மையாக நடத்துவதற்காக 3 சிறப்பு மாநில கண்காணிப்பாளர்களும் தேர்தல் ஆணையத்தின் சார்பாக 65 போது தேர்தல் பார்வையாளர்களும் இருபத்தி ஒன்பது காவல்துறையை சேர்ந்த தேர்தல் பார்வையாளர்களும் களம் இறக்கப்பட்டு உள்ளனர் இவர்களை தவிர இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு அதிகாரிகள் அரசியல் கட்சிகளுக்கு உதவுவதற்காக அவர்களிடமிருந்து புகார்களை பெறுவதற்காக தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் வெயிலை மறைப்பதற்கான கூடாரம் நாற்காலிகள் குறைந்தபட்சம் ஒரு சக்கர நாற்காலி கிருமி நாசினி முகக் கவசங்கள் உள்ளிட்டவை இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்து இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் இந்த முறை 18 முதல் 19 வயது வரையிலான முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 348836 ஆகும்.

சுமார் 10,000 ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்கள் தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட இருப்பதாகவும் இவை தவிர அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் களத்தில் இறங்கி கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டதில் இருந்து சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான விலைமதிப்பு மிக்க பொருள்கள் கைப்பற்றியதால் தேர்தல் அன்று பணம் மற்றும் பொருட்கள் வினயோகத்தை தடுக்க கூடுதல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் மது வினியோகம் அதிகம் இருக்கும் என்பதால் ஜம்மு காஷ்மீர் இமாச்சல பிரதேசம் ஹரியானா ராஜஸ்தான் மற்றும் சண்டிகர் ஆகிய அண்டை மாநிலங்களில் எல்லைப் பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு உள்ள மதுபான கடைகளை மூட அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com