போதை விவகாரம்: 2 ஹீரோயின்கள் உட்பட 9 பேருக்கு நோட்டீஸ்!
போதை பொருள் விவகாரத்தில் 2 ஹீரோயின்கள் உட்பட 9 சினிமா பிரபலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹெராயின், அபின் போன்ற போதைப்பொருட்களை விற்றுவந்த ஒரு கும்பலை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதன் பின்னணியில் பிரபல ஹீரோயின்கள், ஹீரோக்கள் உட்பட பல சினிமா பிரபலங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தெலங்கானா கலால் துறை 9 சினிமா பிரபலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஒருவர் பஞ்சாப்பை சேர்ந்த நடிகை. தென்னிந்திய சினிமாவில் நடித்து வருபவர். இன்னொரு ஹீரோயினும் இதில் சம்மந்தப்பட்டுள்ளார். சில ஹீரோக்கள், ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர் உள்ளிட்டோர் இதில் அடங்குவர். இவர்கள் அனைவரும் விசாரணைக் குழு முன் இன்னும் 6 நாட்களுக்குள் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. யார் அந்த நடிகர், நடிகைகள் என்ற விவரங்களை கலால் துறையினர் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.