\
சொன்னது போலவே, ஆர்.எஸ்.எஸ். தந்திரத்தை ஆரம்பித்துவிட்டது: பிரணாப் மகள் ட்விட்!

சொன்னது போலவே, ஆர்.எஸ்.எஸ். தந்திரத்தை ஆரம்பித்துவிட்டது: பிரணாப் மகள் ட்விட்!

சொன்னது போலவே, ஆர்.எஸ்.எஸ். தந்திரத்தை ஆரம்பித்துவிட்டது: பிரணாப் மகள் ட்விட்!
Published on

நான் சொன்னது போலவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பாஜகவும் மோசமான தந்திரத்தை ஆரம்பித்துவிட்டன என்று பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி கூறியுள்ளார்.

நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு உரையாற்றினார். இந் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் பிரணாப் முகர்ஜியிடன் கூறினர். அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜியும் வேண்டாம் என்று கூறியிருந்தார்.

’பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை வைத்து பாஜக பொய்யான செய்திகளை பரப்பும்,  நிகழ்ச்சியில் பிரணாப் என்ன பேசினார் என்பது மறக்கப்பட்டு, அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை மட்டுமே வைத்து பொய்யான செய்திகளையும் தகவல்களை யும் பாஜக பரப்பும். அதற்கான வாய்ப்பை நீங்கள் அளிக்கிறீர்கள்’ என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதை உறுதிபடுத்தும் விதமாக, ஆர்.எஸ். எஸ். அமைப்பினர் போல, பிரணாப் முகர்ஜியும் சல்யூட் அடிக்கும் மார்பிங் புகைப்படங்கள் இணையத்தில் வெளி யாகியுள்ளன.

இதைக் குறிப்பிட்டுள்ள பிரணாப்பின் மகள் ஷர்மிஸ்தா, ’நான் பயந்தது நடந்துவிட்டது. அதனால்தான் எச்சரித்தேன். நான் சொல்லி சில மணி நேரங்கள் கடந்த நிலையில், பாஜவும் ஆர்.எஸ்.எஸும் தங்களது மோசமான தந்திரத்தை ஆரம்பித்துவிட்டன’ என்று ட்விட்டரில் கூறியுள்ளார். அதோடு அந்த மார்பிங் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com