\
ஹோட்டல் கழிப்பறைகள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இலவசம் 

ஹோட்டல் கழிப்பறைகள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இலவசம் 

ஹோட்டல் கழிப்பறைகள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இலவசம் 
Published on: 

அசாம் மாநிலம் குவஹாத்தியிலுள்ள ஹோட்டல்களின் கழிப்பறைகள் இனி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொது கழிப்பறையாக செயல்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அசாம் மாநிலம் குவஹாத்தியில் மாநகராட்சி நிர்வாகம் ஒரு புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதன்படி இனிமேல் குவஹாத்தியில் ஹோட்டல்களிலுள்ள கழிவறைகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும். அதாவது அனைத்து ஹோட்டல்களும் பெண்கள் மற்றும் குழந்தைகள் இலவசமாக பயன்படுத்த வழி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் குவஹாத்தி நகரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உகந்ததாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த முடிவை அமல்படுத்தாத ஹோட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த உத்தரவுக்குள் நட்சத்திர ஹோட்டல்களும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com