கழிப்பறை நீரில் பானிபூரியா!... சிசிடிவியால் சிக்கிய கடைக்காரர் !

கழிப்பறை நீரில் பானிபூரியா!... சிசிடிவியால் சிக்கிய கடைக்காரர் !

கழிப்பறை நீரில் பானிபூரியா!... சிசிடிவியால் சிக்கிய கடைக்காரர் !
Published on

தெருவோரக் கடைகளில் உணவு சாப்பிட விரும்புவர்கள் தங்களுடைய உணவு எப்படி செய்யப்படுகிறது எங்கிருந்து வருகிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். உடலின் ஆரோக்யத்தை கருத்தில்கொண்டு சுகாதாரமான உணவை எடுத்துக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும்.

மும்பையில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு தெருவோர பானிபூரி கடையில், கழிப்பறை நீர் பயன்படுத்தப்பட்ட சம்பவம் அந்தக் கடையின் தினசரி வாடிக்கையாளர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.

கோல்ஹாபூரில் ரன்கலா ஏரிக்கு அருகில் இருக்கும் ஒரு பிரபலமான பானிபூரி தள்ளுவண்டி கடை ‘மும்பை கி ஸ்பெஷல் பானிபூரி வாலா’. இந்த கடையில் கிடைக்கும் டேஸ்ட்டான உணவுகளை சாப்பிட எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும்.

இந்த கடையின் உரிமையாளர் பானிபூரி தண்ணீரில் கழிப்பறை நீரை கலந்தது அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியது. அந்த வீடியோ இணையங்களில் வைரலான பிறகு, ஆத்திரமடைந்த கடையின் வாடிக்கையாளர்களே அந்த கடையை அடித்து நொறுக்கி, பொருட்கள் அனைத்தையும் எடுத்து தெருவில் வீசியிருக்கின்றனர். பானிபூரி தண்ணீரில் கழிப்பறை நீரை கலந்த இந்த சம்பவம் உணவுப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com