வங்கதேசத்தில் வெடித்த வன்முறையால் பிரதமர் பதவியிலிருந்து விலகி, நாட்டிலிருந்து வெளியேறினார் ஷேக் ஹஸீனா.
வங்கதேச நாடாளுமன்றம், பிரதமர் இல்லத்தை கைப்பற்றி சூறையாடிய போராட்டக்காரர்கள், முன்னாள் அதிபர் ஹிஜிபூர் ரகுமானின் உருவசிலையை சேதப்படுத்தினர்.
வங்கதேசத்தில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு விரைவில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என அந்நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இல்லத்தில் கூடியது பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு . வங்கதேச அரசியல் விவகாரம் குறித்து முக்கிய அமைச்சர்கள் ஆலோசனை செய்யவுள்ளனர்.
உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியா? என்ற கேள்விக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூசக பதில்.
தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர், எல்லைத்தாண்டிய குற்றச்சாட்டில் பலரை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.இதனால், மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதை தடுக்க விரைவில் நடவடிக்கை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் மூன்றாயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் அவினாஷ் சேபிள் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம் .டேபிள் டென்னிஸ் மகளிர் அணி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
மல்யுத்தம் அரையுறுதி போட்டியில் விரல் உடைந்த நிலையிலும் போராடிய இந்திய வீராங்கனையின் கையில் ஏற்பட்ட விபத்தால், பதக்க வாய்ப்பு பறிபோனதால் கண்ணீர்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லக் ஷயா சென் வெண்கலத்திற்கான போட்டியில் ஏமாற்றம். இந்தவகையில், முழங்கை காயத்துடன் கடைசி வரை போராடி வெற்றி வாய்ப்பை இழந்தார்.