இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | தீவிரமடையும் புயல் To தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை, அறிவிப்புகள்!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தீவிரமடையும் புயல் முதல் தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • தென்மேற்கு வங்கக் கடலில் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் ஃபெஞ்சல் புயல். காரைக்கால் - மாமல்லபுரம் இடையே இன்று பிற்பகல் கரையை கடக்கிறது.

  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டையிலும் விடுமுறை அறிவிப்பு.

  • ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று நடைபெற இருந்த அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு. மாற்றியமைக்கப்பட்ட தேதிகள் பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவிப்பு.

  • பணியாளர்களை இன்று வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்த வேண்டும் என தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்.

  • புயல் கரையை கடக்கும்போது ஓ.எம். ஆர், ஈ.சி.ஆர் சாலைகளில் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.

  • அத்தியாவசிய தேவைகளின்றி வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்.

  • புயல் எதிரொலியாக சென்னையில் உள்ள பூங்காக்கள் மூட்டப்பட்டுள்ளது என மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு.

  • ஃபெஞ்சல் புயல் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது பூங்கா நிர்வாகம்.

  • புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை, பெசன்ட்நகர் கடற்கரை சாலை மூடல். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை.

  • புயல் எதிரொலியாக புதுச்சேரி மெரினா கடற்கரைக்கு செல்லும் சாலை மூடல். தொடர் கண்காணிப்புப் பணியில் காவல் துறை.

  • விழுப்புரம் கோட்டக்குப்பம், பொம்மையார் பாளையம் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை. கடற்கரைக்கு செல்லும் சாலைகளை தடுப்புகளால் மூடிய காவல் துறையினர்.

  • சென்னையில் வழக்கம் போல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும், மழையை பொறுத்து தேவை ஏற்பட்டால் பேருந்து சேவையில் மாற்றம் செய்யப்படும் எனவும் தகவல்.

  • சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் 13 விமானங்கள் ரத்து. வானிலையை பொறுத்து சில விமான சேவைகளில் மாற்றம் செய்யப்படும் என அறிவிப்பு.

  • ஃபெஞ்சல் புயல் தொடர்பாக செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பியது தமிழக அரசு. இந்நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.

  • புயலின்போது பலத்த காற்று வீசும் என்பதால் அனைத்து கட்டுமான நிறுவனங்களும் கிரேன்களை அகற்ற உத்தரவு. விளம்பர போர்டுகளை பாதுகாப்பாக இறக்கி வைக்கவும் அரசு அறிவுறுத்தல்.

  • ஃபெஞ்சல் புயல் காரணமாக மாமல்லபுரம், கோவளம் பகுதிகளில் கடல் சீற்றம். சுமார் 7 அடி உயரத்திற்கு அலைகள் ஆக்ரோஷம்.

  • மாமல்லபுரத்தில், தங்கும் விடுதிகளில் இருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தல். கடற்கரைகளுக்கு செல்ல வேண்டாம் என காவல் துறையினர் எச்சரிக்கை.

  • செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் கடல் அரிப்பு. குடியிருப்புகளுக்குள் கடல் நீர் புகுந்து விடும் அபாயம்.

  • கடலூரில் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 7 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். புயல் எதிரொலியான மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுப்பு.

  • ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் 2,229 முகாம்கள் தயாராக இருப்பதாக தமிழக அரசு அறிவிப்பு. நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரம்.

  • செங்கல்பட்டு மாவட்டத்தில் தயார் நிலையில் 290 நிவாரண முகாம்கள். 390 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம்.

  • ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக கடலூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம். 222 நீச்சல் வீரர்கள், 26 பாம்பு பிடி வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

  • காங்கிரசை வலுப்படுத்த கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம் என டெல்லியில் நடந்த கட்சி செயற்குழு கூட்டத்தில் மல்லிகார்ஜூன் கார்கே கருத்து..

  • தேசிய இனப்பெருக்க தொழில்நுட்பம் மற்றும் வாடகைத் தாய் வாரியத்திற்கு மக்களவை பெண் எம்பிக்கள் இருவரை உறுப்பினர்களாக நியமிக்க திட்டம்.

  • வாரியத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா விளக்கம்.

  • பாம்பு கடியை கவனிக்கத்தக்க நோயாக அறிவித்தது மத்திய அரசு. பாம்பு கடி சம்பவங்களை கண்காணிப்பதற்கான அமைப்பை உருவாக்கவும் மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல்.

  • மலேசியாவில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு. குடியிருப்புகள் நீரில் மூழ்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்.

  • உகாண்டாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக உயர்வு. 100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதால் தேடுதல் பணி தீவிரம்.

  • எல்லோருடைய வாழ்விலும் வெற்றிடம் இருப்பதாக நினைக்கிறேன் என விவாகரத்து அறிவிப்புக்கு பின் முதன்முறையாக கோவா திரைப்பட விழாவில் மனம் திறந்த ஏ.ஆர். ரஹ்மான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com