இலங்கை அதிபர் தேர்தலில் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. இதில், ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாச, அனுராகுமாரா உட்பட 38 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
திருப்பதி லட்டில் மிருகக்கொழுப்பு கலக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக ஆந்திர அரசிடம் விளக்கம் கேட்டார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா.
லட்டில் கலப்படம் தொடர்பான செய்தி கவலை தருவதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து.
முந்தைய ஆட்சியில் இருந்தவர்கள், திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத் தன்மையை குலைத்துவிட்டதாக சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு.
100 நாள் ஆட்சியின் தோல்விகளை திசைத்திருப்பவே கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விடுவதாக ஜெகன்மோகன் விளக்கம் .
3 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இந்நிலையில், ஐநா சபையில் உரையாற்றுவதுடன் அதிபர் வேட்பாளர் ட்ரம்ப்பை சந்திப்பார் எனவும் தகவல்.
மாற்றுத்தினாளி மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை இருமடங்காக அதிகரிப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என அறிவிப்பு.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம் என தெரிவித்துள்ளார்.
4 நாட்களுக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என தொழிலாளர்களுக்கு சாம்சங் நிறுவனம் எச்சரிக்கை.இதற்கு, பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடுமாறு தொழிலாளர்கள் வலியுறுத்தல்.
கோவை அருகே சட்ட விரோதமாக மண் அள்ளியவர்களை உடனே கைது செய்ய உயர் நீதிமன்றம் ஆணை. மண் அள்ளப்படுவதை மனுதாரர் வீடியோ காலில் நேரடியாக காட்டிய நிலையில் நீதிபதி உத்தரவு.
திருவண்ணாமலை மலைச்சரிவில் தீப்பிடித்து 5 ஏக்கர் வனப்பகுதி நாசம். இதில், அரிய வகை மரங்கள், மூலிகைச்செடிகளும் கருகின.
லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல். இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்.
சென்னை கிரிக்கெட் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 149 ரன்களில் சுருண்டது வங்கதேசம். 308 ரன் முன்னிலையுடன் வலுவான நிலையை எட்டியது இந்தியா.
அதிரடி ஆக்சன் காட்சிகள்; என்கவுன்டரை ஆதரிக்கும் வசனங்களுடன் வெளியானது ரஜினிகாந்தின் வேட்டையன் பட டீசர்.