HeadLines
HeadLinesfacebook

HeadLines|அரசுப்பள்ளியின் கல்வித்தரம் - ஆளுநர் vs உதயநிதி To பாராலிம்பிக்கில் தொடரும் பதக்கவேட்டை

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, அரசுப்பள்ளியின் கல்வித்தரம் குறித்த ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் உதயநிதி பதில் முதல் பாராலிம்பிக்கில் 25ஆக உயர்ந்த இந்தியாவின் பதக்க எண்ணிக்கை வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் கல்வியின் தரம் குறைவாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் விமர்சனம். இதற்கு, மாநிலத்தின் முன்னேற்றத்தை பார்த்து வயிற்றெரிச்சலில் சிலர் குறை கூறுவதாக அமைச்சர் உதயநிதி பதிலளித்துள்ளார்.

  • ஏதாவது கருத்து சொல்ல வேண்டும் என்பதால் மாநில பாடத்திட்டம் குறித்து ஆளுநர் பேசி வருகிறார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சனம்..

  • இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடித, எழுதியுள்ளார்.

  • புரூனே, சிங்கப்பூர் பயணங்களை முடித்துவிட்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி. இந்நிலையில், 3 நாட்கள் சுற்றுப்பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

  • கேரள திரையுலகில் விஸ்வரூபம் எடுத்த பாலியல் குற்றச்சாட்டு. நடிகர்கள் முகேஷ், எடவேலா பாபுவுக்கு முன்ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.

  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் சென்னை காவல்துறை ஆணையர் அருண் தகவல்.

  • நாமக்கல் அருகே அரசுப்பள்ளியில் மனிதக்கழிவுகள் வீசப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், பள்ளி சமையலர்களை பழிவாங்க மனிதக்கழிவுகளை வீசியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்தார் .இந்நிலையில், உறுப்பினர் அட்டையை பகிர்ந்து ஜடேஜாவின் மனைவி பதிவிட்டுள்ளார்.

  • பாராலிம்பிக் ஜூடோ போட்டியில் வெண்கலம் வென்றார் கபில் பர்மர். இந்நிலையில், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.

  • ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு வருகிறதா? .அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com